Tuesday, April 16, 2024
-- Advertisement--

சென்னை ஏர்போர்ட்டில் காவலருக்கு கைகொடுத்துவிட்டு சென்ற அஜித்..!!! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.

அஜித்குமார் தன்னைத்தானே செதுக்கி கொண்ட நடிகர் ஆரம்பத்தில் பல தோல்விகள் பிரச்சனைகளை சந்தித்து வந்த அஜித் தனது விடா முயற்சியினால் தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.

குறிப்பாக அஜித்துக்கு போட்டியாளராக கருதப்படும் விஜய் கூட அஜித்திடம் உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்டதற்கு அவருடைய தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும் என்றும் கூறியிருந்தார். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை கொண்ட நடிகர் தான் அஜித். ஒரு நேரத்தில் அஜித் மார்க்கெட் அவ்வளவு தான் அஜித் படங்கள் சரியில்லை என்று சொல்லும் அளவிற்கு அவருடைய மார்க்கெட் குறைந்தது அதன்பின் விஸ்வரூபமெடுத்து மேலும் மேலும் வலுப்பெற்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் வந்து நின்றார் அஜித்.

அஜித்தை பொறுத்தவரை சினிமாவில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் அவர் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர். சூட்டிங் இல்லாத நேரத்தில் தனக்கு பிடித்தது போல பைக்கை எடுத்துக்கொண்டு தான் எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கெல்லாம் சாதாரணமாக சென்று வருவார்.

அஜித்தின் ஆசை உலகம் முழுவதும் பைக் பயணம் செல்ல வேண்டும் என்பது தான் அதற்கான முயற்சிகளில் இறங்கி வருகிறார். தற்பொழுது H வினோத் இயக்கத்தில் இயக்கிய AK 61 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த திரைப்படம் ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பந்தப்பட்ட கதை என்கிறார்கள் ஒரு சிலர் இதற்காக மவுண்ட்ரோடு செட் ஒன்றை போட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

தற்போது அஜித் படப்பிடிப்பு எப்போதும் அவருக்கு ஆஸ்தான ஹைதராபாத்தில் உள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் நடக்கும் அந்த வகையில் அஜித் சென்னையில் மற்றும் ஹைதராபாத் என்று மாறி மாறி சென்று வருவார்.

சமீபத்தில் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக வந்த அஜித் அங்கு அருகிலிருந்த காவலரிடம் கைகள் குலுக்கி சென்றுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles