அஜித் தமிழ் சினிமாவில் நிறைய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அனால் ரசிகர் கூட்டத்திற்கு பெயர் கிடையாது சங்கமும் கிடையாது. இருப்பினும் இவர் ரசிகர்கள் எண்ணிக்கை குறையவே இல்லை.
இந்நிலையில் மே 1 ஆம் தேதி அன்று அஜித் பிறந்தநாளை ஒட்டி அஜித்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதுகுறித்த புகைப்படங்களும் வாழ்த்துக்களும் இணையத்தில் உலாவந்தன.
அஜித்துடன் வீரம் படத்தில் ஐந்து அண்ணன் தம்பிகளில் ஒருவராக நடித்த சுஹேல் என்பவரும் அஜித்துடன் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டு வலது தெரிவித்துள்ளார்.
அதில் அஜித் வீரம் படம் படப்பிடிப்பின் போது இருவரும் நீண்ட தூரம் பைக் ரைட் சென்றுள்ளனர். அப்போது டீ குடிக்க இருவரும் நின்ற போது அங்குள்ள ஏழை குடும்பம் ஒன்று அஜித்தை பார்த்து தன் வீட்டில் டீ குடிக்குமாறு கேக்க அஜித்தும் அங்கு சென்று டீ குடித்துள்ளார்.
மேலும் அவர்கள் அஜித்துடன் ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதை அஜித்திடம் கேக்க தயங்கியுள்ளனர். ஆனால் அஜித்தோ அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் சுஹேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.