தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் கமலஹாசன். உலக அளவில் புகழ்பெற்ற இவர் உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இவர் நடிக்க வேண்டிய பல படங்களில் பல நடிகர்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இவர் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமான தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் முதலில் கமலஹாசன் இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இவர் ஒரு வேடத்தில் கமலஹாசனும் மற்றொரு வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதேபோன்று கமலஹாசனின் நீண்ட கால கனவு படமான மருதநாயகம் மீண்டும் தொடங்க உள்ளதாகவும், ஆனால் அதில் கமலஹாசன் கதாநாயகன் இல்லை என்றும் அவருக்கு பதில் முன்னணி நடிகர் ஒருவர் இதில் நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கமலஹாசனின் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று விருமாண்டி.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் இந்த படத்தில் தல அஜித் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதை ஆதரிக்கும் வகையில் அஜித்தின் ரசிகர்கள் விருமாண்டி படத்தில் நடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டு அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவரை எதுவும் வெளிவரவில்லை, இருப்பினும் தல அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்காக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.