தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ஆக கருதப்படுபவர்கள் அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்கள் தான் இவர்களுடைய திரைப்படத்தை பார்ப்பதற்காக தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக படை எடுத்து வருவார்கள் ரசிகர்கள். எப்போதெல்லாம் இவர்கள் திரைப்படம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் தியேட்டர் ஓனர்கள் சந்தோஷத்தில் இருப்பார்கள் அந்த அளவிற்கு வசூல் சாதனை படைப்பார்கள் குறிப்பாக விஜய் படங்கள் எப்போதும் அஜித் படங்களை விட நல்ல வசூல் செய்வது வழக்கம்.

அஜித்தின் திரைப்படங்கள் நன்றாக இல்லை என்றால் தியேட்டருக்கு வரத் தயங்குவார்கள் ஆனால் விஜயின் படம் சுமாராக இருந்தால் போதும் தியேட்டர் உரிமையாளர்கள் நல்ல லாபத்தை சம்பாதித்து விடுவார்கள் அது மட்டுமல்ல விஜயின் மார்க்கெட் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் வெளிநாடுகளில் பெரிய அளவில் உள்ளதால் விஜயின் திரைப்படங்களை வெளிநாடுகளில் வெளியிட்டு கூடுதல் லாபத்தை பார்ப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பொங்கல் ரேஸில் மோத இருக்கிறார்கள் விஜய் அஜித். போனி கபூர் இடமிருந்து அஜித்தின் துணிவு படத்தை ஒரு பெரிய விலைக்கு வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளார் உதயநிதி ஸ்டாலின். தீவிர விஜய் ரசிகராக இருந்து கொண்டு அஜித் படத்தை வெளியிடுகிறாரே என்ற கோபம் ரசிகர்களுக்குள் இருந்தாலும் அதற்கும் விளக்கம் கொடுத்து உள்ளார் உதயநிதி.

துணிவு திரைப்படம் பொங்கலுக்கு தான் வெளியாக உள்ளது என்பது எனக்குத் தெரியாது நான் ஏற்கனவே அந்த படத்தை வாங்கி விட்டேன் இன்னும் படம் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் உதயநிதி். தளபதி விஜயின் படங்களுக்கு பெரிய டிமாண்ட் இருக்க வாரிசு திரைப்படத்தை வாங்குவதற்காக அதிக தொகையை வைத்துக்கொண்டு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள். இது ஒரு புறம் இருக்க வாரிசு பொங்கல் ரிலீஸ் என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையில் துணிவு படத்தை பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம் அஜித்.

துணிவு படத்தின் சில காட்சிகள் சிஜி ஒர்க் முடியவில்லையாம் ஆதலால் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது தாமதமாகும் என்ற இந்த செய்தியை அஜித்திடம் பட குழுவினர் தெரிவிக்க அஜித் இந்தப் படம் பொங்கலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம் அதற்காக இரவும் பகலும் டப்பிங் செய்து இந்த படத்தை முடித்து தரத்துக்கு நான் ரெடி நீங்கள் உங்களுடைய வேலைகளை மற்ற நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுத்து படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் வழியை பாருங்கள் என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விட்டாராம் அஜித்்

இந்த தடவை விஜய்யுடன் மோதிப் பார்த்து விடுவோம் என்று அஜித் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.