இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் முதல் முதலில் பிரபல தமிழ் பட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இருவருக்கும் காதலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இருவருக்கும் 2007ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். மேலும் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் மது போதையில் ஆட்டம் போட்ட பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஈஷா அம்பானியின் சங்கீத் நிகழ்ச்சி பார்ட்டியின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
just froze up havent moved for 40 minutespic.twitter.com/r6S1nK0TV4
— ps-2 lockdown (@acejxhyo) April 4, 2023