சென்னை: நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது தற்போதைய சூழலில் கடினமான ஒன்று என்பது களத்தில் வேலை பார்க்கும் எங்கள் பலருக்கும் நன்றாகவே தெரியும்… ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் தலைமை செய்யும் சில விஷயங்கள் எங்களை அப்செட் செய்கிறது என்று அதிமுக களநிர்வாகிகள் பலர் புலம்ப தொடங்கி உள்ளனர். அப்படி என்ன நடந்தது?
அதிமுகவிற்கு அத்தனை சாதகமான தேர்தல் கிடையாது 2026 சட்டசபை தேர்தல். தற்போது வரை களத்தில் திமுகவே வெற்றிக்கு அருகில் இருப்பதாக narrative உள்ளது. ஆனால் அதிமுக இப்போதும் களத்தில் பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. வெற்றியோ.. தோல்வியோ திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தேர்தல் களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரால் எதிர்க்கப்பட்டு வரும் நாடாளுமன்ற மறுவரையறை ஒரு சட்டத்திற்கு, அதிமுக தலைமை ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்திய கட்சித் தொண்டர் ஒருவர், “வெற்றிக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா.. என்று தெரிந்தும் நாங்கள் களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் எதிர்க்கும் ஒரு சட்டத்தை நமது தலைமை ஆதரிப்பது, எஞ்சியிருக்கும் வாக்கு வங்கியையும் பாதிக்கும் செயல்” என மிகுந்த கசப்புடன் தெரிவித்தார்.










