அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்று தமிழ் மக்களால் செல்லமாக கூப்பிடபடும் நடிகர் என்றால் அது சிவா தான். சிவாவின் டைமிங் காமெடி மற்றும் எதார்த்தமான நடிப்பால் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். இவர் தமிழ் சினிமாவுக்கு என்று வித் கொடுப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் பணிபுரிந்து வந்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சென்னை 600028 படத்திற்கு முன்பே ஜீவா இயக்கத்தில் வெளியான 12B என்ற படத்தில் நடிகர் ஷாம் அவர்களின் நண்பராக நடித்திருந்தார் அதனைத்தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் ஆளவந்தான் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் செய்திருந்தார். வெங்கட்பிரபுவின் திரில்லர் படமான சரோஜா என்ற படத்திலும் சிவா நடித்திருந்தார். சிவாவின் கலகலப்பான நடிப்பைப் பார்த்த சுந்தர்சி சிவாவை வைத்து கலகலப்பு என்ற படத்தை எடுத்தார். சிவாவை ஹீரோவாக வைத்து தமிழ் படம் என்ற படத்தை வெளியிட்டார்கள். அந்தப் படமும் வசூலில் சக்கைபோடு போட்டது அதுமட்டுமல்லாமல் தமிழ் படங்களை கிண்டல் செய்து லொள்ளு சபா போல எடுத்ததால் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சில படங்கள் நடித்து வந்த சிவா. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா இயக்க ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்த வணக்கம் சென்னை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அனிருத் இசையில் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. படமும் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது.
சமீபத்தில் அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவா அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன் நேஷனல் லெவல் பேட்மிட்டன் வீராங்கனையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிவா ஒருவிதத்தில் தல அஜித்திற்கு சொந்தம். அஜித் தான் அவருடைய திருமணத்தையே தலைமைதாங்கி நடத்தியதாக செய்திகளும் வந்தது. சிவாவின் திருமண புகைப்படங்கள் இதோ