Wednesday, July 17, 2024
-- Advertisement--

தங்க தாமரை போல் அழகில் ஜொலிக்கும் அதிதி..!!! வைரலாகும் போட்டோ சூட்..!!!

தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர் சங்கர்.  இவர் எடுத்த படங்கள் எல்லாமே பல கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டது.  மேலும் பிரம்மாண்டம் என்றால் அதற்கு மறுபெயர் சங்கர் என்று கூறலாம். அந்த அளவிற்கு  இவர் படத்தில் பிரம்மாண்டம் அமைந்திருக்கும்.  

இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லை.  அதுபோல வசூலிலும்  பல கோடி சாதனை பெற்றுள்ளது.   

இப்படிப்பட்ட பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி,மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.  சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வமுள்ள அதிதி படிப்பை முடித்துவிட்டு தான் அப்பாவிடம் பேச வேண்டும் என்று மருத்துவ படிப்பை முடித்துவிட்டு அப்பாவிடம்  நடிப்பதற்கு அனுமதி வாங்கி உள்ளார் . 

அப்படி இவர் அனுமதி வாங்கி நடித்த முதல் படம் நடிகர் கார்த்தியுடன் விரும்மன். இந்த படம் எதிர்பார்த்ததை விட மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.  தற்பொழுது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  

அவ்வப்போது தனது இணைய பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதிதி தற்பொழுது தங்க நிற சேலை அணிந்து கலக்கல் ஆன புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பல நெட்டிசன்கள் இவரை வர்ணித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles