சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றாலே காமெடி காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் என்று ரஜினி விஜயின் ஃபார்முலா அப்படியே இருக்கும். ரஜினியின் விஜயுடைய அக்மார்க் ஃபார்முலாவை எடுத்துக்கொண்டு சினிமாவில் களமிறங்கியவர் தான் சிவகார்த்திகேயன்.
இப்போது சிவகார்த்திகேயனின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக குடும்ப ரசிகர்கள் வந்து படத்தை பார்த்து செல்கிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் கிட்ஸை பிடித்து விட்டார் இதனை தளபதி விஜய் அவர்களே விருது வழங்கும் விழா ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார்.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வர சிவகார்த்திகேயன் வெற்றிக்கு என்ன காரணம் என்று கொஞ்சம் அலசி பார்த்தால் சிவா சமீப காலமாக தனது திரைப்படங்களை தானே தயாரித்து வெளியிடுகிறார் அதாவது இணை தயாரிப்பாளராக அவருடைய படத்தை தயாரிக்கிறார். லைக்கா, ரெட் ஜெயின் போன்ற ஜாம்பவான்கள் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்க விரும்புகிறார்கள் அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டிங் யுக்தி உள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் டாக்டர் டான் திரைப்படங்கள் ப்ரோமோஷன் பார்த்தாலே தெரியும்.
இது ஒரு புறம் இருக்க சிவகார்த்திகேயன் கவனமாக தனது அடுத்த அடுத்த படத்தின் இயக்குனர்களை தேர்ந்தெடுக்கிறார் சிவகார்த்திகேயனை இன்று படம் வைத்து வெற்றி கொடுப்பவர்கள் தான் சில வருடங்களில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்குகிறார்கள்.
தற்பொழுது சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் வித்தியாசமான கெட்டப்பில் சிவா மாஸ் ஆன பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது. சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்குவது யோகி பாபுவின் மண்டேலா படத்தை இயக்கிய மடோன்னே அஸ்வின் அவர்கள் தான். சமீபத்தில் தான் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் யாரெல்லாம் இணைகிறார்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். முதல் படமான விருமான் திரைப்படம் இன்னும் வெளியாகாத அதிதிக்கு அதற்குள் மூன்றாவது படமாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.
நடிகை சரிதா அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரசிகர்களை பெரிய வியப்பில் ஆழ்த்திய அறிவிப்பு இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது தான். சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
மிஸ்கின் செல்வராகவன் போன்ற நல்ல இயக்குனர்கள் நடிப்பதிலும் ஆர்வம்காட்டி வருகிறார்கள்.