தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானவர் டாப்சி. இவர் தமிழில் பிரபல நாயகியாக இல்லாவிட்டாலும் ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக ஊரடங்கு காரணமாக மூன்று மாதத்திற்கு மேல் பிரபலங்கள் பலரும் வீட்டில் கழித்து வருகின்ற நிலையில் தமிழ் நடிகர் பிரசன்னா அண்மையில் மின்வாரியத்திடம் அதிக கரண்ட் பில் குறித்து பேசி சர்ச்சை எழுந்தது.
அதன்பின் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை ராதாவின் மகளான கார்த்திகாவும் கடந்த மாதம் மட்டும் ஒரு லட்சம் வரை இவருக்கு கரண்ட் பில் வந்ததாக இணையத்தில் கோபத்துடன் பதிவிட்டிருந்தார். இதற்கும் எந்தவித பதிலும் மின்வாரியம் அளிக்கவில்லை.
இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது கரண்ட் பில் 36 ஆயிரம் வரை வந்துள்ளது எனவும் இது எந்த கணக்கு என்று எனக்கு புரியவில்லை என்றும் கோபத்துடன் மின் வாரியத்தை விளாசித் தள்ளியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு அளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மின்வாரியம் கூடிய விரைவில் இதற்கு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.