நடிகை யுவராணி தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். “அழகன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான யுவராணி அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து அதன்பின் தளபதி விஜய்யுடன் ஜோடியாக “செந்தூரப்பாண்டி” என்ற படத்தில் நடித்தார். செந்தூரப்பாண்டி இந்த படத்தில் இவரும் தளபதி விஜய்யும் நிஜ காதலர் ஆகவே வாழ்ந்திருந்தனர். அந்த அளவிற்கு படத்தில் நன்றாக நடித்து இருந்தனர்.
பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த யுவராணி சமீபத்தில் “சிங்கம்3” படத்தில் சூர்யாவிற்கு அண்ணியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்தில் கார்த்திக்கு சகோதரியாகவும் நடித்தார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அவர் ஏகப்பட்ட சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் யுவராணியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இவருக்கா வயது 45 என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.