பிக் பாஸ் சீசன் 2 மிகவும் போரடித்த பொழுது அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக வந்தவர் விஜயலட்சுமி. இவர் வந்த பிறகுதான் இந்த சீசன் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இவர் சென்னை 28 படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல பட வாய்ப்புகள் வந்தன. அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதன் பிறகு சில சீரியல்களிலும் தொலைக்காட்சிகளின் நடுவராகவும் பணிபுரிந்து வந்தவர் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே நல்ல பிரபலமானார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காலமாக வீட்டிலிருக்கும் விஜயலட்சுமி பொழுதைக் கழிப்பதற்காக உடற்பயிற்சி செய்வது என பல வேலைகளை செய்து வந்தார் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் தற்போது கார் பற்றி பேசியுள்ளார். இன்னும் இவர் பல விஷயங்களை பற்றி பேசுவார் என்று கூறப்படுகின்றது. இதனால் இவர்களுக்கு இவ்வளவு திறமை உள்ளதா என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.