நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமானின் விவகாரம் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கொரோனா பிரச்சினை காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்களை பற்றி விளாசி வருகிறார்.
சமீபத்தில் கூட ஒரு காணொளி வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தன்னுடைய மரணத்திற்கு பின்பு யாரும் சீமானை விட்டுவிட வேண்டாம் என்றும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜயலட்சுமி அதில் என்னை எல்லாரும் காப்பாற்றி இருக்காங்க நான் நலமாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். உங்களின் அன்பு ஏதோ ரூபத்தில் வந்து என்னை காப்பாற்றி இருக்கிறது. வாழவே பிடிக்காமல் சாக வேண்டும் என்று நினைத்தேன். சீமான் மாதிரியான ஆட்கள் எப்படி அரசியல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் பிஜேபியின் கைக்கூலி என்று சொல்வது இது ஏதோ ஒரு கட்சியோட கைக்கூலி என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் மனிதத் தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.
தயவுசெய்து இந்த பிரச்சினையை எல்லாரும் பாலிடிக்ஸ் பண்ணவேண்டாம்.
எனக்கு பின்னால் எந்த ஒரு அரசியல் கட்சியும் இல்லை என் அனுமதியின்றி காயத்ரி ரகுராம் என்னை டிஸ்சார்ஜ் செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று விஜயலட்சுமி கூறியதாவது “எனக்கும் சீமானுக்கும் இடையேயான உறவு குறித்து இயக்குனர் அமீருக்கு தெரியும் ஆனால் இப்போது மௌனமாக இருக்கிறார் ஏன் என்று தெரியவில்லை என்று கூறினார். மேலும் தன் வீட்டில் தர்ணா போராட்டம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
.
இயக்குநர் அமீர் கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்றும் குறிப்பிடத்தக்கது..