Monday, June 24, 2024
-- Advertisement--

கொழு கொழுன்னு இருந்த வித்யூ ராமன்.!! 30 கிலோ உடல் எடையை குறைத்து உடலை சிக்கன வைத்திருக்கும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகைகள் மிகக்குறைவு. தனது தனது உடல் வாகினால் நகைச்சுவை நாயகியாக வலம் வந்தவர் வித்யு ராமன். இவர் தமிழ் சினிமாவில் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பிரபல முன்னணி குணச்சித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தமிழில் நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, வீரம், ஜில்லா, காக்கிசட்டை, மாஸ், இனிமே இப்படித்தான், வேதாளம், மீண்டும் ஒரு காதல் கதை, பஞ்சுமிட்டாய் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் 90 கிலோவுக்கும் மேல் இருந்த வித்யூ ராமன் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் நேரத்தை சரியான முறையில் கழித்து உடற்பயிற்சி மிக கடினமாக செய்து 30 கிலோ வரை எடை குறைந்து உள்ளார். இதோ அந்த புகைப்படம்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles