தமிழில் குணச்சித்திர நடிகரான விஜயக்குமாரின் மகள் வனிதா. இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சில காலமாக சொந்த வாழ்க்கை பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுப்பதற்காக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார் . சீசன் சீசன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
ஏற்கெனவே வனிதாவிற்கு 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து நடந்துள்ளது. இந்நிலையில் மூன்றாவதாக தற்போது பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது வனிதாவின் மூன்றாவது திருமணம் பற்றி தான். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார். என் கணவர் பீட்டர் பால் என்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார் மேலும் எனக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து வனிதா ஏற்கனவே எனக்கு தெரிந்த ஒன்றுதான் திருமணம் முடிந்த கையோடு இது மாதிரி பிரச்சனைகள் வரும் என்று முன்கூட்டியே தெரியும். அவரது மனைவியை பிரிந்து எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் தற்பொழுது பணத்திற்காக தான் இந்த புகாரை அளித்துள்ளார். நான் இதை எப்படி சரி செய்வேன் என்பது எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.