தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். அருண் விஜய்யின் சகோதரி ஆவார். இந்நிலையில் இவர் படங்களில் நடித்து வந்த சமயத்தில் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார் ஆகாஷ். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர் .மீண்டும் ஆனந்தராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தார். இந்நிலையில் இருவரும் மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க விரும்பிய வனிதா பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார்.
ஆரம்பத்தில் இவரது படபட பேச்சு துணிச்சலான சுபாவம் அனைவரையும் வெறுத்தது. இருப்பினும் ஒரு பக்கம் இவருக்கு பெண்கள் சப்போர்ட் முழுவதுமாக இருந்தது இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் இருந்து வெளிவந்த பிறகு தொடர்ந்து படங்களிலும் சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் விரைவில் மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கோலிவுட்டில் வதந்திகள் வந்து வண்ணம் உள்ளன. இது குறித்து வைத்தார் தரப்பிலிருந்து எந்த மறுப்பும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.