சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் வாணிபோஜன். இவர் சிறு வயதிலிருந்தே மாடலிங்கில் இருந்து வந்துள்ளார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இவர் தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களிடையே ஒரு இடத்தை பிடித்தார். இவர் நயன்தாரா சாயலில் இருப்பதால் இவரை சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் மக்கள் அழைப்பர்.
இந்த சீரியல் முடிந்த பிறகு இவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அதன் பிறகு இவரை சினிமாத் துறை கவனித்தது. அதனால் சமீபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஓமே கடவுளே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய ரசிகர்கள் வர ஆரம்பித்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரத்திற்கு இவர் நடித்துள்ள வீடியோவை வெளியிட்டு உள்ளார். அவரை பார்த்து ரசிகர்கள் இளம் ரோஜாப் பூவைப் போன்று உள்ளீர்கள் என கருத்து கூறி வருகின்றனர்.