சன்டிவி ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் வாணிபோஜன். இந்த சீரியல் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஓடியது.
இதன் மூலம் இவர் சத்யா கதாபாத்திரமாகவே பலர் மக்கள் மனதில் வாழ்ந்து வந்தார். இந்த சீரியல் முடிந்த பிறகு ஒருசில நிகழ்ச்சிகளில் இவர் நடுவராக பங்கேற்று வந்தார். அதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற படத்தில் மிகவும் நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவரை செல்லமாக மீரா அக்கா என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். வீட்டிலிருந்தபடியே பொழுதை கழித்து வரும் வாணிபோஜன் அவ்வப்போது தனது பழைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அதுபோல பஞ்சுமிட்டாய் ரவிக்கையில் பளபளவென மின்னும் சேலையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்