சினிமா துறையை பொருத்தவரை இந்த வருடத்தில் நிறைய மரணங்கள் நிகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பல திறமையான கலைஞர்களும் பழம்பெரும் இறந்து நடிகர்களும் வருவது சினிமா வட்டத்தையும் ரசிகர்களையும் சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் உஷாராணி. இவர் தமிழில் 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் மலையாளத்தில் 200 படங்களிலும், ஹிந்தியிலும் நடன நடித்துள்ளார்.
இவர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கமல் நடித்த அரங்கேற்றம் படத்தில் கமலுக்கு ஜோடியாவும், சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக என்னை போல் ஒருவன் படத்திலும், எம்.ஜி.ஆர் ஜோடியாக பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும் நடித்துள்ளார்.
சில காலமாக சிறுநீரக கோளாறு பிரச்சினைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவருக்கு வயது 62. இவரது உடல் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது இறுதிச் சடங்குகள் இன்று அவர் மகன் விஷ்ணு சங்கரால் நடத்தப்படும். உஷாரானி இறந்த செய்தியை அறிந்த நடிகர் பிருத்விராஜ் அவரது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.