தமிழ் சினிமாவில் 18 வருடங்களுக்கு மேல் முன்ணனி நடிகையாக உள்ளவர் நடிகர் திரிஷா. இவர் தமிழில் லேசா லேசா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு ஜோடி, மௌனம் பேசியதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் மார்க்கெட் உச்சத்தில் இருந்துகொண்டே இருந்த நிலையில் சற்று சறுக்கலை சந்தித்தாலும் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் பழைய இடத்தை மீண்டும் பிடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 96 படம் இவருக்கு பல விருதுகளை வாங்கி கொடுத்தது. தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு சென்னையில் உள்ள எத்திராஜ் காலேஜில் மேற்படிப்பு முடித்தார். இவர் பள்ளி, கல்லூரியில் உள்ள பொது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் உள்ள வருகிறது. இதோ அந்த புகைப்படம்.


