தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தமிழ் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் இவர் நடித்துள்ளார்.
இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அவருக்குப் பெற்றுத்தந்தது. இவர் நடிப்பில் என்றும் மறக்க முடியாத படங்களாக இன்னும் இருப்பவை விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் 96 ஆகியவை ஆகும்.
சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது வயது 37 இருப்பினும் இவருக்கு தொடர்ந்து கதாநாயகி வாய்ப்புகளே வந்துகொண்டிருக்கின்றன. சமீப காலமாக இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவந்தார். இருப்பினும் இவர் அந்த சமூக வலைத்தளத்தில் மிகவும் மூழ்கி விட்டதால் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுவேனோ என்று பயந்து சமூக இணையதளத்தில் இருந்து சற்று விலகி இயற்கையோடு ஒன்றி இருக்க போகிறேன் என்று கூறியுள்ளார். எல்லோரும் பத்திரமாக வீட்டில் இருங்கள் நான் இயற்கையோடு கொஞ்ச நாட்கள் கழிக்கப் போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.