Wednesday, August 19, 2026
-- Advertisement--

“மெகா வெற்றிக்குப் பிறகு விஜய் வீட்டில் த்ரிஷா சந்திப்பு”

தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், நடிகை த்ரிஷா விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பலரும் கொண்டாடி வரும் வேளையில், நடிகை த்ரிஷாவின் வருகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்று மே 4-ம் தேதி நடிகை த்ரிஷாவின் 43-வது பிறந்தநாள் ஆகும். முன்னதாக தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி திருமலை வேங்கடாசலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்த த்ரிஷா, அங்கிருந்து நேரடியாக சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார் வெள்ளை நிற காரில் விஜய்யின் வீட்டிற்குள் த்ரிஷா நுழையும் காட்சிகள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
அவரைப் படம் பிடிக்கப் புகைப்படக் கலைஞர்களும், ஊடகத்தினரும் விஜய்யின் வீட்டின் முன் பெருமளவில் திரண்டனர். பிங்க் நிற உடையில் புன்னகையோடு காட்சியளித்த த்ரிஷா, விஜய்யைச் சந்தித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தேர்தல் முன்னிலையில் 100 இடங்களைக் கடந்து TVK முன்னேறுவது விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கட்சியின் தேர்தல் வெற்றி, மறுபுறம் நெருங்கிய தோழி த்ரிஷாவின் பிறந்தநாள் என விஜய்யின் இல்லமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles