தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இப்படத்திற்கு பிறகு கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அதன் பிறகு தொடர்ந்து நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தெலுங்கில் இவர் நடித்த பாகுபலி படத்திற்கு பிறகு இவருடைய சினிமா வாழ்க்கையை பாகுபலிக்கு முன் பின் என இரண்டாகப் பிரிக்கும் அளவிற்கு உயர்ந்தது. இவருடைய மார்க்கெட் அந்தஸ்தும் சினிமா வட்டாரத்தில் உயர்ந்தது. தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து வரும் தமன்னா தற்போது இரண்டு படம் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் புதிய படத்தில் நடிக்க தமன்னாவுக்கு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தமன்னா அதிக சம்பளம் கேட்டதால் படக்குழு ஒப்புக்கொள்ளாமல் தமன்னாவை நிராகரித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் தமன்னா, கடந்த பிப்ரவரி மாதமே படத்தில் நான் நடிப்பது குறித்து தயாரிப்பு தரப்பு என்னை கேட்டார்கள், ஆனால் துரதிஸ்டவசமாக தயாரிப்பு நிறுவனமே பேச்சுவார்த்தை நிறுத்தியது. அதற்குள் இப்படி ஒரு வதந்தியை நீங்கள் கிளப்புவது நியாமா ? மேலும் சம்பளம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் இதே கேள்வியை நீங்கள் ஒரு ஹீரோவை பார்த்து ஏன் கேட்க மாட்டீர்கள்

அதிக சம்பளம் ஏன் பெண்கள் வாங்கக் கூடாது, அதிக சம்பளம் வாங்கும் பெண்கள் என ஏன் ஒரு பேச்சு வரக்கூடாது, என்று கோபமாக பேசி உள்ள தமன்னா.