தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்வேதா பாசு. இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் இவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறி இவரை கைது செய்தனர். இந்நிலையில் இவர் மீது பொய் குற்றசாட்டு கூறியதாக கூறி இவரை விடுதலை செய்தனர்.
அதன் பிறகு இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்தன. மேலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . திருமணமான ஒரு வருடத்திற்குள் இவர் மனம் ஒத்துப்போகாமல் விவாகரத்தும் செய்தார்.
இந்நிலையில் தனிமையில் இருக்கும் இவர் தற்போது ஊரடங்கு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நான் இதுவரை தனிமையில் இருந்ததில்லை, கல்யாணம் ஆகும் வரை அப்பா அம்மாவுடன் அதன் பிறகு கணவருடன், விவாகரத்திற்கு பிறகு நண்பர்களை சந்திக்க அடிக்கடி வெளியில் செல்வேன்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பதால் மனநலம் பாதிக்கப்பட்டு வீடியோ மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறேன்.