தமிழில் கதாநாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி . இவர் தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனுஷ் நடித்த உத்தம புத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், கடைசி பெஞ்ச் கார்த்தி, சக்க போடு போடு ராஜா, வந்தாராஜாவாதான்வருவேன், விசுவாசம் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் அணியாகவும் அம்மாவைப் போன்று வயது முதிர்ந்த வேடங்களில்தான் நடித்துள்ளார். இவருக்கு வயது தற்போது 42.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தன் வயதுக்கு மீறிய கவர்ச்சியில் உள்ளார் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். தன் மகளுக்கு நிகரான அழகில் அவர் உள்ளார் என்றும் பலரும் கருத்துக் கூறுகின்றனர்.


