தமிழ் சினிமாவில் திறமையுள்ள நடிகைகளில் நடிகை சுனைனாவும் ஒருவர். இவர் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவரது அசாத்தியமான நடிப்பு முதல் படம் போல இல்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.
அதன் பிறகு மாசிலாமணி, நீர் பறவை, சமர், நீர் பறவை, என்னை நோக்கி பாயும் தோட்டா, காளி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சமர் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் ட்ரிப் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நன்கு பேசப்பட்டது. இந்த படத்திற்கான ஷூட்டிங் பெரும்பாலும் காட்டில் நடைபெறுகிறது.
இதில் அவர் படப்பிடிப்பின் போது அவரை ஒரு நாய் கடிப்பது போன்று படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.