உலக நாயகன் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் ஏழாம் அறிவு என்ற படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் இவருக்கு அறிமுகம் படம். முதல் படத்தில் கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து இவர் விஜய், அஜீத், விஷால், தனுஷ் என முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடித்தார். தமிழில் புலி, வேதாளம், பூஜை ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். அதன்பிறகு இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது எந்த படமும் நடிக்காமல் சினிமாவிற்கு கொஞ்சம் கேப் விட்டு இருந்தார்.

தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள ஸ்ருதி தெலுங்கில் காக்கி, வக்கீல் ஷாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் யாரா என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தப்படம் OTT ல் வெளியாக உள்ளது. இந்த ட்ரைலரில் சுருதி மிகவும் கவர்ச்சியாகவும் ஆபாச காட்சிகளிலும் நடித்துள்ளார்.










