உலக சினிமாவே திரும்பி பார்க்கும் ஒரு தமிழ் நடிகர் என்றால் அது உலக நாயகன் கமலஹாசன். அவர் நடிப்பு பல முன்னணி நடிகர்களுக்கு ஒரு பாட புத்தகம் என்று பலர் மேடையில் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் சமீப காலமாக திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வருகிறார். அவர் ஆரம்பத்தில் சினிமாவில் பாடகியாக பணியாற்றி உள்ளார். இதுவரை இவர் முப்பது பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடியுள்ளார். இந்நிலையில் இவருக்கு பெரிய இசை அமைப்பாளராக வேண்டும் என்பதுதான் விருப்பம்.
அதனால் நடித்து கொண்டே கொண்டே தன் இசைத்துறையிலும் அவர் கவனித்து வருகிறார். இந்நிலையில் இவர் தமிழில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்து வந்தன. தமிழில் முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித், விஜய் போன்றவர்களோடு இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது பிற மொழிப் படங்களையும் தேர்வு செய்து இவர் நடித்து வருகிறார். இந் நிலையில் சமீபகாலமாக ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது நீருக்கடியில் நடனமாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் வியப்பில் மூழ்கி உள்ளன. ர் அதற்கு சில கேப்ஷன் பதிவிட்டுள்ளார். அதில் என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும், எங்க வேணாலும் செல்ல முடியும் என்று பதிவிட்டுள்ளார், இதோ அந்தப் புகைப்படங்கள்