சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி. இவர் பட வாய்ப்பிற்காக தெலுங்கு பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்து பின் ஏமாற்றிவிட்டார்கள் என கூறி போராட்டம் நடத்தினார்.
அதன் பிறகு தமிழ் சினிமா பிரபலங்கள் ஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் போன்றோர் மீதும் புகார் கூறியும் வந்தார். இவர் புகார் கூறுவதற்கு ஆதாரம் கூறாமல் வருவதால் இவரை தற்போது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
தற்போது தனது முகநூல் பக்கத்தில் கையில் பீர் பாட்டில் வைத்துக்கொண்டு தினமும் ஒரு பெக் குடித்தால் நல்லா இருக்கும் என்று பதிவிட்டு தற்போது ஊரடங்கால் எல்லா மதுபான கடைகளும் மூடி கிடைக்க இவருக்கு எப்படி கிடைத்தது என கேள்வி எழும் அளவிற்கு சர்ச்சையை கிளப்பி வந்துள்ளது.










