ரஜினி நடித்த தளபதி படத்தில் “யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே” என்ற பாடலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷோபனா.
இவர் மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடிகை மட்டுமின்றி நான் நடன இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு தற்போது வயது 50 ஆகிவிட்டது. தனது 41 வயதில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் கருத்து குறித்து அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காததால் இந்த திருமணத்திற்கு தயார் போலவே உள்ளது. இந்த செய்தி கேட்டு சிலர் 50 வயதில் திருமணமா என்று கருத்து கூறி வருகின்றனர்.