அந்த நேரத்தில் 90’ஸ் கிட்ஸ்க்கு 100 நாட்கள் ஓடிய படம் என்று பேசப்படும் படம் என்றால் அது சந்திரமுகி படம் தான். கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் பி .வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் சந்திரமுகி. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், சூப்பர் ஸ்டார் படத்தில் முதல் முறையாக முதல் முறையாகும்.
இப்போது பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவருகின்றன சில படங்கள் ரசிகர்களின் கோரிக்கைகள் வெளிவருகின்றன சில படங்கள் கதைகள் இல்லாமல் எடுக்கப்படுகின்றன
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.
தற்போது பொன்மகள் வந்தால் படத்தின் பிரமோஷனுக்காக ஜோதிகா அளித்த பேட்டியில் சந்திரமுகி 2ல் படத்தில் நடிக்க என்னை யாரும் அழைக்கவில்லை. யார் நடித்தாலும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.
இந்நிலையில் சந்தமுகி 2ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் தற்போது சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சந்திரமுகி முதல் பாகத்தில் சிம்ரன் நடிக்க இருந்தது, ஆனால் அவர் அப்போது கர்ப்பமாக இருந்ததால், தான் ஜோதிகா இந்த படத்தில் நடித்தார்.ஆனால் அந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா கச்சிதமாக பொருந்திவிட்டார்,தற்போது மீண்டும் சிம்ரனை சந்தமுகி கதாபாத்திரத்தில் பார்த்தால் அவருக்கு அந்த உருண்டை கண் வருமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.