ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு கோடி கேட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சி தந்துள்ளார் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்போதும் ஹீரோயினாக நடிக்கிறார். அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஸ்ரேயாவிடம் பேசப்பட்டது.

அப்போது ஒரு கோடி சம்பளம் கேட்டு ஸ்ரேயா அதிர்ச்சி தந்துள்ளார். ஒரு படத்தின் ஹீரோயினாக நடிக்கும் போதே ஸ்ரேயாவுக்கு இந்த தொகை சம்பளம் தரப்படுவதில்லை.

அப்படி இருந்த போதும் வெறும் ஒரு பாடலுக்கு ஒரு கோடி கேட்பதா என தயாரிப்பாளரும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

இந்த தகவல் சிரஞ்சீவி இடம் தெரிவிக்கப்பட்டதாம் நமக்கு படத்துக்கான செலவு முக்கியம் தயாரிப்பாளர் கஷ்டப்படக் கூடாது. அதனால் ஸ்ரேயா வேண்டாம் என சிரஞ்சீவி நாசுக்காக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.