தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினியுடன் நடித்த சிவாஜி படம் இவரை முன்னணி நடிகைகளுள் ஒருவர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
இவர் தமிழில் ஜெயம் ரவி, விக்ரம், ரஜினி,விஜய், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி, அமெரிக்கன் சினிமா போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் இவர் கிரிக்கெட் விளையாட்டின் விளம்பர தூதராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.தனது இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களுக்கு யோகா கலையைக் கற்றுத் தருகிறார். அதற்கு மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது