தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எப்போதாவது மிகவும் புதியதாக கதை கொண்ட படங்கள் வெளிவரும். அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றுத்தரும். அந்த வகையில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வித்தியாசமான கதை களம் கொண்ட படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்த படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். சென்ற வருடம் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பலரின் கவனத்தைப் பெற்றார்.இப்போது தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் போல்டான பெண்ணாக இருந்தால் முதலில் பைக் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று யார் சொன்னது, பைக் ஓட்டுவது எவ்வளவு சிரமமாக உள்ளது அப்படி ஓட்டும் போது நான் கீழே விழுந்துவிட்டேன். ஆனால் எல்லோரும் பைக்கிற்கு ஏதும் டேமேஜ் இல்லையே என்று தான் கேட்டார்கள், என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.










