கொரானோ வைரஸ் நாடெங்கும் அதிவேகமாக பரவிவருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகெங்கும் பல நாடுகளில் தலை விரித்து ஆடுகிறது. மேலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே வருவதால் இந்த வைரஸை ஒழிப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.
இதனை தடுப்பதற்கு தற்போது உள்ள ஒரே வழி என உலகெங்கும் உள்ள நாடுகள் அனைத்தும் சமூக விலகலை கடைபிடிப்பதுதான் ஒரே வழி என கருதி மக்களை கடைபிடிக்க சொல்லிவருகிறது. மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷா ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே எப்படி பொழுதை போக்குகிறார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே கேக் செய்யும் பழக்கம் இருந்ததால் அதை தற்போது பொழுதுபோக்கிற்காக வீட்டில் செய்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.


