தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் இவர் சூர்யா, கார்த்தி, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கத் தொடங்கினார். இதில் ஆர்யாவுடன் நடித்த கஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இவர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் சாயிஷா மிகவும் நடனத்தில் தேர்ந்தவர். இதனால் அவ்வப்போது தனது நடனத் திறமையை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு நடனமாடி மக்கள் மனதை கொள்ளை அடித்துள்ளார். அந்த நடனத்தை பார்த்து மயில் தோகை போல உங்கள் நடனம் உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த நடன வீடியோ.