90 களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் சங்கவி. அஜீத் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் விஜயுடன் சில கிசுகிசுக்களில் அடிபட்டார். அந்த சமயத்தில் தான் விஜய் விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில படங்களில் நடித்து வந்த சங்கவி படவாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவை விட்டு விலகினார்.
வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் குழந்தை தற்போது தனது 42 வயதில் முதல் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியின் கொளஞ்சி என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு பிறந்த பெண் குழந்தையோடு புகைப்படத்தை வெளியிட்டுள்ள சங்கவிக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.