தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் நடிகை சமந்தா, சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் நன்றாக தமிழ் பேசவும் தெரிந்த நடிகை, பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.
இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, விஷால்,தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படத்தில் இவர் ஜோடி சேர்ந்து அடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிகர் நாகார்ஜுனின் மகன் நாகன் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் இவர் மார்க்கெட் கொஞ்சம் கூட குறையாமல் தொடர்ந்து நீடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதோ அந்த புகைப்படம்.