பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் பானாகாத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.
தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் சமைப்பது, செடிகள் வளர்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தன் மாமனாருடன் சேர்ந்து பசுமை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 3 மரங்களை நட்டு உள்ளார். மேலும் தனது சக நடிகையான கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோருக்கு இந்த சவாலை அவர் விட்டுள்ளார்.