தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமா உலகிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் மற்றவர் கூறியதே கிடையாது. பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனிமையானவர்கள் என்று தான் பலரும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே.இவருக்கு மார்க்கெட் மிகவும் குறைவாக இருந்தது .தற்போது தெலுங்கில் உருவான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து தற்போது சமந்தாவுக்கு இணையான நடிகையாக இவர் உள்ளார்.
கையில் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு இவர் எப்படி பார்த்தாலும் அழகாக இல்லை, என்று கருத்துக் கூறியுள்ளார், உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் வந்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரோ ஹேக் செய்து விட்டார்கள், என்று தனது உதவியாளருடன் சரி செய்து வருவதாகவும் கூறினார், ஆனால் இதனை சமந்தா ரசிகர்கள் விடுவதாக இல்லை .அவரிடம் மன்னிப்புக் கோருமாறு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன்பு சமந்தா பூஜா ஹெக்டேவை நல்லா நடிக்க தகுதி இல்லாதவர் என்பது போல் கூறிய ஒரு ஆடியோவை வெளியிட்டு இது மட்டும் சரியா.? அதனால் பூஜா செய்தது சரிதான் என்பதுபோல் இருவர் ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த இருவருக்கும் இடையேயான சர்ச்சைகள் ரசிகர்களிடையே பெரிய சண்டையே உருவாகியுள்ளது.