தமிழில் துணை நடிகையாக இருந்தவர் சாக்ஷி. ரஜினி நடித்த காலா படத்திலும், அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் இவர் துணை நடிகையாக நடித்துள்ளார். இவருக்கு கதாநாயகி வேடத்தில் பட வாய்ப்புகள் வராததால் பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டார்.
இந்த சீசனில் இவர் மக்கள் அன்பை சம்பாதிக்க முடியாததால் சிறிது காலத்திலேயே இந்த சீசனில் மக்களால் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சின்டெர்ல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தற்போது குஷி பட ஜோதிகா போன்று உடை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.