தமிழ் சின்ன திரையில் நடிகர் பிரபுதேவாவை மையமாக கொண்டு நடத்தப்பட்ட உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகச்சி மூலம் அறிமுக ஆனவர் சாய் பல்லவி. இவர் அதன் பிறகு நடிகர் நிவின் பாலி நடித்த ப்ரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து இருப்பார்.
இந்த படத்தில் நடித்ததன் மூலமாக இவருக்கு இந்திய அளவில் ரசிகர் கூட்டம் ஏறியது. அதன் பிறகு பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார். தமிழில் மாறி, NGK போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவருடைய தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார், அதில் அவரையே உரித்துவைத்தது போல உள்ளார் என ரசிகர்கள் கொமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.