தமிழில் நடிகர் ரவி நடித்த முதல்படமான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சதா. இந்த படத்தில் வரும் போயா போ டயலாக் மிக பெரிதாக பேசப்பட்டது. அதன்பிறகு இவர் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தன.
தமிழில் ஷங்கர் படத்தில் விக்ரமுடன் இணைந்து அன்னியன் படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு எதிரி, திருப்பதி, மதகதராஜா, டார்ச்லைட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சதாவிற்கு சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் வரவில்லை. எனினும் சின்னத்திரையில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார். அந்த வகையில் சில புகைப்படங்கள் இதோ