தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ரோஜா. தற்போது தமிழ் சினிமாவில் அம்மா அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ வாகவும் ரோஜா இருந்து வருகிறார்.
இந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு இவர் பல நன்மைகளை செய்து வருகிறார். அண்மையில் இவர் நகரி தொகுதிக்கு தண்ணீர் குழாய் திறக்க வந்த பொழுது அப்பகுதி மக்கள் ரோஜாவிற்கு வழிநெடுக்க பூத்தூவி வரவேற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு தற்போது ரோஜா மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நகரி தொகுதிக்கு புதிதாக வழங்கப்பட்ட 108 ஆம்புலன்சில் ஏறி அதை ஒட்டியபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் 20 கிலோமீட்டர் வரை அவர் ஓடியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நாடெங்கும் அதிகரித்து வரும் கொரானோ ஆந்திர மாநிலத்திலும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று மக்களுக்கு குறை உள்ளதா என சந்தேகப்படும் நோயாளிகளை அழைத்துச் செல்ல கடந்த வாரம் கடற்படையில் உள்ள 412 புதிய ஆம்புலன்ஸ்கள் ஒரு சில வாகனங்கள் நகரி தொகுதிக்கு அனுப்பப்பட்டன. அவசர காலங்களில் தயாராக இருக்க வேண்டிய ஆம்புலன்ஸ் எங்கேயும் அனுப்பாமல் ரோஜா தனது தொகுதியில் பல மணி நேரம் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் மற்றொரு விழாவில் கலந்து கொண்டு வந்த ரோஜா புதிதாக அரசு நகரி தொகுதிக்கு வழங்கியுள்ள ஆம்புலன்சில் ஏறி அதை ஓட்டியபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த செய்தி எதிர்க்கட்சித் தரப்பில் மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது அவரை சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.