தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை நடிகை ரோஜா. இவர் நடிப்பு நடனம் முக பாவனை என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது.
அஜித், விஜய், சத்யராஜ், சூர்யா, பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்பு தற்போது ரோஜா சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சில படங்களில் அம்மா, அண்ணி வேடங்களிலும் நடித்து வருகிறார். ரோஜா மற்றும் ஆர்கே செல்வமணி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரோஜா சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தன. அதில் ரோஜாவின் மகள் மிகவும் அழகாக உள்ளார், அம்மாவையே மிஞ்சிய அழகில் உள்ளார். கூடிய சீக்கிரத்தில் இவர் திரையில் நடிக்க வருவார் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.