தமிழில் நடிகர் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் ஜோடியாக நடித்தவர் ரிக்கி கண்ணா. இந்த படத்தில் வரும் முதல் கனவே முதல் கனவே பாடல் மிகவும் பிரபலமானது. இந்த படத்தின் மூலம் இளசுகளின் மனத்தில் இடம் பிடித்தவர் ரிக்கி.
இவர் பாலிவுட் நடிகையாக இருப்பினும் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வராததால் திருமணம் ஆகி லண்டனில் செட்டில் ஆகி விட்டார். இவர் தந்தை சகோதரி என அனைவருமே சினிமா துறையில் இருப்பதால் இவர் இந்தியாவிற்கு பட விழாக்களுக்கு மட்டுமே வருகை தருகிறார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருப்பது இவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.