தமிழ் சினிமாவில் இமைக்காநொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராசி கண்ணா. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு அடங்கமறு என்ற படத்தில் ஜெயம் ரவியோடு ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் பெற்றார்.
இதன் பிறகு இவர் அயோக்கியா என்ற படத்தில் நடித்தார்,அதன்பிறகு விஜய் சேதுபதியின் சங்க தமிழன் என்ற படத்திலும் நடித்தார்.இவர் நடிகை ஆக இந்தி ஹிந்தி மொழியில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.
அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ராசிகன்னா தற்போது தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது நான்கு படங்கள் வெளிவர உள்ளன.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ராசி கண்ணா கிடார் வாசித்து பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த திறமையும் உள்ளதா என கேள்வி கேட்டு வருகின்றனர்.