நடிகர் திலகம் சிவாஜி நடித்த முதல் மரியாதை படத்தில் வரும் அந்த நிலவ தா நா கையில பிடிச்சேன் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அந்த பாடலில் நடித்த நடிகை ரஞ்சனி. இவர் இந்த படத்தில் தான் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் ஆனார்.
தற்போது கொரானோ ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சினிமா துறையினருக்கு உதவும் வகையில் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி அதன் மூலம் உதவி வருகின்றனர். அந்த குரூப்பில் நாடக கலைஞர் வாசுதேவன் குரூப்பில் இருந்த பாரதிராஜா படத்தில் அறிமுகமான ரஞ்சனியை பார்த்து நீங்க நடிகையா?வேறு தொழில் செய்பவர் தானே என்று கேட்டு வந்தார்.
ஒரு நடிகையை இழிவு படுத்தி சினிமாத்துறை வேறு, நாடக தொழில் வேறு என்று சுட்டிக்காட்டி பேசியதாகவும் நடிகை ரஞ்சனி பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.
நடிகை ரஞ்சனி தற்போது அரசியலில் இருந்து வெளியேறி மகளிர் ஆணையத்திலும் பணியாற்றி வந்தவர், மேலும் கேரளாவில் அம்மா சங்கத்தில் இருந்து வெளியே வந்து நடிகை மஞ்சு வாரியாரின் தலைமையில் சினிமா பெண்கள் கூட்டுக்குழுவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.