ரம்யா பாண்டியன் நடிகர் அருண் பாண்டியன் அவர்களின் அண்ணன் மகள். என்னதான் சினிமாவில் செல்வாக்கு இருந்தாலும் ஆரம்பத்தில் பட வாய்ப்புக்காக நிறைய கஷ்டப்பட்டார் அதன்பின் ஜோக்கர் என்ற படத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து ரம்யா ஆண் தேவதை என்ற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகைகள் தங்கள் பிரபலத்தை தக்கவைத்துக் கொள்ள அடிக்கடி ஏதாவது போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் ரம்யாவின் இந்த பச்சை நிற சேலை போட்டோசூட் ரசிகர்களிடம் பெரிய பிரபலத்தை அடைந்தது.

ஒரு சேலையில் இப்படியெல்லாம் கவர்ச்சி காட்டலாமா என்கிற அளவிற்கு ரம்யா புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோ சூட்டிற்கு பிறகு ரம்யா பாண்டியனை தெரியாத இளசுகளே இல்லை அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்த ரம்யா. நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொண்டார்.

தற்பொழுது சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக கூட செல்கிறாராம். கடை திறப்பு விழா, விளம்பரப்படம் என பிஸியாக இருக்கும் ரம்யா தற்பொழுது BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கார் வாங்கி அதன் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.


