Wednesday, December 4, 2024
-- Advertisement--

இவங்களுக்கா வயது 50 ஆக போகிறது நம்பவே முடியலையே..!!! ரம்யாகிருஷ்ணனின் புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்.

ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகை என்றால் கண்டிப்பாக இவரை சொல்லலாம் இவர் நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு தனது நடிப்பை கனகச்சிதமாக வெளிப்படுத்தி மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர். தனது 14 வயதில் தமிழ் சினிமாவிற்கு வெள்ளை மனசு என்ற படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ரஜினியின் படிக்காதவன் மற்றும் கமலின் பேர் சொல்லும் பிள்ளை என்ற படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் கவனம் செலுத்தி நிறைய படங்களில் நடித்து வந்த ரம்யா. தெலுங்கிலும் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாகவும் வந்தார். அதேபோல் தமிழிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அப்படி ரம்யாவிற்கு சிக்கிய தீனி தான் படையப்பா. படையப்பா என்ற படத்தில் நீலாம்பரி என்ற அடங்காத பெண் வேடத்தில் அவர் நடித்த நடிப்பை பார்த்து வியந்து போனார்கள். அந்தப்படத்தில் அவர் செய்த வில்லத்தனம் ரம்யா இப்படி நடிப்பாரா என்று ஆச்சரியப்படும் வகையில் இருந்தது.

படையப்பா படம் ரம்யாவிற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரஜினிக்கு சமமான கதாபாத்திரம் என்பதால் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசனை செய்த இயக்குனருக்கு அந்த படத்தில் ரம்யா நடித்தது பெரிய பிளஸ். அதன்பின் ஏகப்பட்ட படங்களில் நடித்து சினிமாவில் ஒரு நல்ல பெயரை சம்பாதித்த ரம்யா.

படையப்பா அதற்குப் பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருந்தது. அந்த நேரத்தில்தான் வந்தது பாகுபலி இந்திய சினிமாவையே உலக தரத்திற்கு கொண்டு சென்ற படம் என்றால் நிச்சயமாக அது பாகுபலி தான். அந்தப்படத்தில் ரம்யா சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். வெகு நாட்களாக காத்திருந்த ரம்யாவிற்கு பாகுபலி ஒரு தீனியாக அமைந்தது.

சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயது 49 நம்பவே முடியவில்லையே இன்னும் இளம் நடிகையை போல இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles